Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புனே ஆலையில் உற்பத்தியை தொடங்கிய கார்னிங் நிறுவனம்

புனே ஆலையில் உற்பத்தியை தொடங்கிய கார்னிங் நிறுவனம்

இதுகுறித்து கார்னிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் தேவைகளை இந்த ஆலை விரைவாக பூர்த்தி செய்யும்" என்றார்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான 'கார்னிங்' மகாராஷ்டிர மாநிலம், புனேவில் தனது புதிய ஆப்டிகல் கனெக்டிவிட்டி உற்பத்தி ஆலையின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

கார்னிங் நிறுவனத்தின் 157-வது ஆண்டு விழாவையொட்டி திறக்கப்பட்டுள்ள இந்த ஆலை, தரவு மையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும். ஏற்கெனவே புனேவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் ஆலை வளாகத்திலேயே இந்த புதிய மையமும் அமைந்துள்ளது. 

இதுகுறித்து கார்னிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர் பிள்ளை கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவைகளை இந்த ஆலை விரைவாக பூர்த்தி செய்யும். 2027-ம் ஆண்டில் இதன் உற்பத்தித் திறன் மேலும் விரிவுபடுத்தப்படும். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் எங்களின் நீண்டகால அர்ப்பணிப்பை இது காட்டுகிறது” என்றார். 

இது இந்தியாவில் கார்னிங் நிறுவனத்தின் 4-வது உற்பத்தி ஆலையாகும். முன்னதாக, 2012-ல் புனேவில் ஆப்டிகல் ஃபைபர் ஆலை, 2025 செப்டம்பரில் தெலங்கானாவில் மருந்து பேக்கேஜிங் கண்ணாடி ஆலை மற்றும் 2025 டிசம்பரில் சென்னை அருகே கொரில்லா கிளாஸ் ஆலை ஆகியவற்றை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 

உலகிலேயே முதன்முதலில் குறைந்த செலவிலான ஆப்டிகல் ஃபைபரை உருவாக்கிய பெருமை கார்னிங் நிறுவனத்தையே சேரும். நிறுவனத்தின் ‘ஸ்பிரிங்போர்டு’ வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2026-ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர்களாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 40 பில்லியன் டாலர்களாகவும் விற்பனையை உயர்த்த கார்னிங் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Innovation needed to unlock $690 billion climate adaptation market
அடுத்த செய்தி
சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் திட்டம் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்